மாமன்னர்
மாமன்னர் மருது பாண்டியர்கள்
தமிழகத்தின் வீர பரம்பரை மருது பாண்டியர்களின்
தமிழகத்தின் வீர பரம்பரை மருது பாண்டியர்களின்
தமிழகத்தி வீர பரம்பரை இனமான அகமுடையார் குலத்தைச்சேர்ந்தவர் உடையார் சேர்வை என்ற மொக்கபழனியப்பன் சேர்வை. இவர் நரிக்குடி அருகில் உள்ள முக்குளம் என்ற ஊரில் பிறந்தவர். இவரது மனைவி சிவகங்கை அருகிலுள்ள புதுப்பட்டி என்ற கிராமத்தில் பொன்னாத்தாள் என்பவராவர். இவர்கள் இருவருக்கும் பிறந்தவர்களே மாமன்னர் மருது பாண்டியர்கள் ஆவார்கள்.
பெரிய மருது 1738-ம் ஆண்டும், ஐந்து வருடம் கழித்து சின்னமருது 1743-ம் ஆண்டும், பிறந்தார்கள். இரண்டு சகோதர்களும் ராமன், லக்குவன் போன்று வீரத்திலும் விவேகத்திலும் சீரும் சிறப்பும் பெற்று விளங்கியதால் இவர்களது வீரத்தை பாராட்டி புகழ்ந்து "பாண்டியர்கள்" என்றபட்டத்தை முகவைமன்னர் வழங்கினார்கள்.
ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜயசேதுபதியின் (1749-1762) மகள் தான் ராணிவேலுநாச்சியார் ஆவார். விஜயசேது பதிமன்னரிடம் வெள்ளையன் சேர்வையும், மருது பாண்டியர்களின் தந்தை மொக்கபழனியப்பன் சேர்வையும் படைதளபதியாக அரசு வேலைக்கு சேர்ந்தார்கள்.
மருது பாண்டியர்களின் தந்தை மொக்கபழனியப்பன் சேர்வையும் படைதளபதியாக அரசு வேலைக்கு சேர்ந்தார்கள்.
ராமநாதபுரம் மன்னர் சேது பதியின் மருமகன் பெரிய உடையார் தேவருக்காக சிவகங்கை சமஸ்தானம் அரண்மனை 1728ம் ஆண்டில் தோற்றம் ஆனது.
மருதுபாண்டியர்கள் மன்னர் முத்துவடுகநாதர் அன்பையும், ஆதரவையும் பெற்றதோடு பட்டத்து ராணி வேலுநாச்சியாரிடத்திலும் மிகவும் அன்பாகவும், ராஜ விசுவாதத்துடன் பணியாற்றினார்கள்.
1772-ம் ஆண்டு ஆற்காடு நவாப் படையும், ஆங்கிலப் படைகளும் போரிட்ட பொழுது, காளையார்கோவிலில் தங்கியிருந்த மன்னர் முத்துவடுகநாதரை தாக்கினார்கள். அவர்களுடன் போரிட்ட பொழுது மன்னர் முத்துவடுகநாதரும், அவரது இளைய மனைவி கௌரி நாச்சியாரும் பீரங்கி குண்டுகளுக்கு பலியாகி 25.6.1772-ல் வீரமரணம் அடைந்தனர். ஆற்காடு நவாப் சிவகங்கை சீமையை கைப்பற்றினார்
ராணி வேலு நாச்சியார் தனது மகள் வெள்ளச்சி நாச்சியாருடன் கொல்லங்குடியில் இருந்தார். மன்னரின் இறப்பு கேட்டு மிகவும் வருந்தினர், தனது கணவர் விட்டு சென்ற பணியை வெற்றிகரமாக செய்து முடிப்பேன் என சூளுரைத்தார், மருது பாண்டியர்கள் ஆலோசித்து வேலு நாச்சியாரையும், மகள் வெள்ளச்சி நாச்சியாரையும் பாதுகாப்பாக வைப்பதற்க்கு திண்டுக்கல் அருகில் உள்ள விருப்பாட்சிபாளையத்துக்கு ரகசியமாக அழைத்து சென்றனர்.
1772 முதல் 1780 வரை 8 ஆண்டுகள் சிவகங்கையில் ஆற்காடு நவாப் ஆட்சியை எதிர்த்து மக்கள் புரட்சி செய்தனர். சிவகங்கை சீமையை ஆற்காடு நவாப்பின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்கு சுல்தான் ஹைதர்அலி மன்னர் படை உதவி வழங்கினார். இந்த போரில் மருது பாண்டியர்கள் வெற்றிபெற்று வேலுநாச்சியாரை சிவகங்கை அரண்மனையில் ராணியாக அரியனை அமர்த்தினர். பின் வேலுநாச்சியார் தனது மகள் வெள்ளச்சி நாச்சியாரை சிவகங்கையின் அரசியாக அரியனை ஏறச்செய்தார்.
ராணி வேலு நாச்சியார் தனது கணவரை இழந்துவிட்டாலும், இளவரசி வெள்ளச்சி நாச்சியார் கன்னிப் பெண்னாக இருந்தாலும், உயர்குடியில் பிறந்த அரசகுல பெண்கள் ஆட்சி மற்றும் நிர்வாகத்தில் ஈடுபடுத்தி கொள்ள இயலாத சூழ்நிலை அக்காலத்தில் நிலவியது. எனவே ராணி வேலு நாச்சியார் தனது சிவகங்கை சீமை ராஜ்யத்தை ஆட்சி செய்ய மருதுபாண்டியர்களுக்கு அதிகாரத்தை கொடுத்து 1780-ம் ஆண்டு சிவகங்கை சீமையின் மன்னர்களாக மருதுபாண்டியர்கள் அரியனை ஏற்றனர்
மாமன்னர் மருதுபாண்டியர்கள் 1780-ம் ஆண்டு முதல் 1801-ம் ஆண்டு வரை 21 ஆண்டுகள் சிவகங்கை சீமையின் பொற்கால மன்னர்களாக ஆட்சி செய்தபொழுது அவர்களால் செயல்படுத்தப்பட்ட சிறப்பு சேவை நலத்திட்ட பணிகள் விவரங்கள்.
மாமன்னர் மருதுபாண்டியர்கள் காளையார்கோவில் 157 அடி உயரம் கொண்ட பெரிய ராஜகோபுரம் உருவாக்கினார்கள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சன்னதியில் 1008 விளக்குகளை கொண்ட இரு திருவாட்சிகளும், புதிய வெள்ளிரததேர், சேர்வைக்காரன் மணி மண்டபம் அமைத்துள்ளார்கள்.
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணன் பெருமாள் கோவிலுக்கு புதிய தேர் செய்து கொடுத்தார்கள்
திருமோகூர் கோவில் முன் மண்டபம் கட்டி கோவிலில் திருப்பணிகளை செய்துள்ளார்கள்.
காளையார்கோவில் ஸ்ரீ சொர்ணகாளீஸ்வரர் கோவிலுக்கு புதியதேர் செய்து, வெள்ளோட்டதன்று தேர் செய்த சிற்ப கலைஞருக்கு தான் கொடுத்த வாக்குறுதியின்படி தனது அரசர் பதவியை வழங்கி சிற்ப கலைஞரை மகிழ்வித்த கொண்ட வள்ளல் நமது மாமன்னர் மருதுபாண்டியர்கள்.
குன்றக்குடியில் முருகருக்கு ஸ்ரீ சண்முகநாதன் மலைக்கோவில் அமைத்தனர், மருங்காபுரி என்ற புதிய தெப்பக்குளம் அமைத்தனர், தைப்பூசத்திற்கு புதிய தேர் செய்து கொடுத்தார்கள்
நரிக்குடியில் அன்னதானம் சத்திரம், அழகிய மீனாம்பாள் அம்மன் கோவில், விநாயகர் கோவில் கட்டினார்கள்.
சுடியூரில் அன்னதானம் சத்திரம் அமைத்தனர். இதுபோல் திருப்பத்தூர், சிங்கம்புணரி, பிரான்மலை, கமுதி, விருச்சுழி, வீரகுடி, புணங்கியனூர், மானூர், ஒழுகுமங்கலம், சிறுவயல், கலியநகரி, சருகனி, பாசிப்பட்டிணம், திருப்புல்லாணி, அழகன்குளம், கோவிலூர், முக்குளம் மற்றும் இதர ஊர்களில் உள்ள கோவில்களில் திருப்பணிகளையும், இறைப்பணிகளையும் செய்து மக்கள் மனதில் இன்றும், என்றும் சிவகங்கை சீமை மாமன்னராக பெருமை பெறுகின்றனர்.
போர்ப்படை பயிற்சி தலத்தினை சங்கரபதி கோட்டையில் அமைத்து அரண்மனையும், கோட்டையும் கட்டினார்கள், அரண்மனைசிறுவயல், மூதூரில் அரண்மனை அமைத்தனர்.
சாத்தரசன்பட்டி அருகே குண்டு அடித்தான் புலி என்ற இடத்தில் வெள்ளையரிடம் போரிட்டு வெற்றிப் பெற்றபொழுது அவர்கள் பயன்படுத்திய பீரங்கி கண்டெடுக்கப்பட்டு தற்போது சாத்தரசன்பட்டியில் நினைவாக உள்ளது.
இவ்வாறு பொற்கால ஆட்சிபுரிந்த மருதுபாண்டியர்கள் "வீரசங்கம் " என்ற அமைப்பின் மூலம் கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரையை திருநெல்வேலி சிறையில் இருந்து மீட்டு, சிவகங்கை சீமைக்கு அழைத்து வந்ததால் வெள்ளைக்காரன் எதிர்ப்பை உருவாக்கி கொண்டனர்.
இதனால் வெள்ளைக்காரன் ஏகாதியபத்தியத்திற்கு எதிராக அனைத்து மன்னர்களையும் ஒன்றினைத்து ஜாதிமதவேறு பாடுகளைமறந்து 16.6.1801-ல் "ஜம்புத்தீவு" போர்பிரகடனம் மூலம் இந்திய சுதந்திரத்திற்கு வீரமுழக்கமிட்டார் சின்ன மருது பாண்டியர். இந்த போர் பிரகடனத்தில் வெள்ளையர்களை ஆதரிப்பவர்கள் கங்கைகரையில் காரம் பசுவை கொன்ற பாவத்தை அடைவார்கள் என்றும், வெள்ளைக்காரனுக்கு துணைபோபவன் இழந்தவர்களுக்கு பிறந்தமைந்தர்கள் என்றும், தோர்கிகளுக்கு பிறந்த பிள்ளைகள் ஆவார்கள் என்றும் திருச்சி மலைக் கோட்டை மதில் சுவரில் எழுதி சுதந்திர போர்பிரகடனத்தை ஆரம்பித்தார்கள்.
சிவகங்கை சீமை மக்களின் அளப்பரியா அன்பும், ஆதரவும், ஒத்துழைப்பும் மருதுபாண்டியர்களுக்கு துணை நின்றதால் ஆங்கிலேயர்களால் மாமன்னர் மருதுபாண்டியர்களை எதிர்த்து போரிட்டு வெற்றிபெற முடியவில்லை. இதில் சினமுற்ற ஆங்கிலேயர்கள் சிவகங்கை சீமையின் கயவர்களிடம் நட்புறவாடி, கயவர்களின் தூண்டுதல் பேரில் அவர்கள் கட்டிய காளையார்கோவில் பெரிய கோபுரத்தினை பீரங்கி வைத்து தகர்த்திடுவோம் என அச்சுறுத்தியால், ஆன்மீக இறைபணியில் அதிக ஈடுபாடு கொண்ட மருது பாண்டியர்கள் கோவிலை இடிக்க வேண்டாம் என கூறி ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டபொழுது மாமன்னர் மருதுபாண்டியர்கள் கைது செய்யப்பட்டு 1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி திருபத்தூரில் தூக்கிலடப்பட்டார்கள், மருது பாண்டியர்களின் வாரிசுகளையும், அவர்களது உறவினர்கள் 573 பேரும் அவர்களுடன் தூக்கிலடப்பட்டார்கள்.
வெள்ளையர்களை எதிர்த்து சுதந்திரத்திற்கு போராடி தன் இன் உயிரை பாரதநாட்டிற்கு காணிக்கையாக (பரிசாக) வழங்கிய மாமன்னர் மருது பாண்டியர்களின் உடல்கள் அவர்களது வேண்டுகோளின்படி காளையார்கோவில் கோபுரத்திற்கு எதிரே 1801-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசால் மாமன்னர் மருதுபாண்டியர்கள் தூக்கிலடப்பட்ட திருப்பத்தூரில் அக்டோபர் 24-ம் தேதி "அரசு வணக்கம் " விழாவும், அக்டோபர் 27-ம் தேதி காளையார்கோவிலில் "குருபூஜை " விழாவும் சீரும் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது
மாமன்னர் மருது பாண்டியர்களின் வீரம்அழிக்கப்படவில்லை.
"எம்குலத்தில் விதைகளாக விதைக்கப்பட்டு விருச்சிகமாக வளர்கிறது" அன்புடன், மருதீஸ்வரர் அனைத்து அகமுடையார் ஆன்மீக சேவைசங்கமம் (மாஸ்) பதிவுஎண்: 03 / 2018
மருதீஸ்வரர் அகமுடயார் சமூகத்திற்கு வருக, தேவைப்படும் மக்களுக்கு நம்பிக்கையின் கதிராக மாற உதவுகிறது.
Phone: +91 9791753222 / +91 9894846947
Whatsapp: +65 93877254 / +65 8386 9714
E-mail: [email protected],
[email protected] &
[email protected]
Website: massmakkal.com